பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.
Labels: கவிதை , சித்திராபவுர்ணமி
திடீரென படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் தெரியாமல் இருட்டு, சட சட வென சப்தம், உடல் புல்லரிக்க குளிர்ச்சி வந்து சூழ்ந்து கொண்டது
அள்ளிக்கோண்டு வருகின்றது மண்வாசனை
ஏதும் புரியாமல் சாளரம் திறந்து பார்த்தால்......
வெளியெங்கும் பரந்து பெய்துகொண்டிருந்தது மழை.
திரும்பி உள்பார்த்தால் குறுஞ்சிரிப்புடனும் கையில் டீ கோப்பையுடனும் ஐன்னல் திண்டில் அமர்ந்திருந்த என் கால் கட்டி உட்காருகின்றாய்
'' யாரடி சொல்லியது நாக்குசுடும் சூட்டுடன் டீ குடித்துக்கொண்டு மழை பார்க்க பிடிக்குமெனக்கு என்று....''

எதிரியின் உடலறுப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
வன்மையாய் கிழித்துக்கொண்டு
எதிர்பவரின் இரத்தம் குடிப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
இதோ புதிய தலைமுறை
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஆயுதங்கள்
முதல் ஆயுதம் கொடுத்தவன்
முத்துக்குமரன்....
தன் உயிரை உருக்கி
தான் கொண்ட கருத்தில்
வேகமேற்றி எதிர்பவர்களுக்கெதிராய்
விஸ்வரூபம் எடுத்து நின்றான்,
அடுத்து....
மென்மையாய் தன்
கால் காக்கும் காலணியை
ஆயுதமாக்கியவன்
அல் ஜடி
மென்மையை கொண்டு
வலியைத் தரும் ஆயுதம்.
இப்பொழுதெல்லாம் அதிகம்
இது தான் பயன்படுகின்றது
அடுத்தது வருகின்றது
பட்டால் உடைந்துவிடும் ஆயுதம்
சொல்லவா வேண்டும்,
ஆசிட் முட்டையை
அரசியல் அடித்தளமாக்கி வந்தவனை
அடித்தது
அழுகிய முட்டை.
ஆயுதம் செய்வதைவிட
ஆயுதம் பழகுவோம்
நம் எதிர்ப்பை திடமாய் காட்ட

தோட்டக் கிணற்றொளியில்
தெரிகின்றன நம் முகங்கள்,
நிர்சலன வானத்திற்கும்
நிலைகொள்ளா இலைகளுக்குமிடையில்
சலனமற்று ;
நமக்கிடையிலான உணர்வுகளுடன்
******************************
அடர்ந்த தூங்குமூஞ்சி
மரநிழல்களில் அமர்ந்திருப்போம்.
கால்நெருடும் சருகுகளும்,
உதிர்ந்த சுல்லிகளும்,
எங்கும் நிறைந்திருக்க
******************************
அடர்ந்த ஊதா நிறங்களில்
பூத்துக்கிடக்கும் கரைமேடுகளில்
நாம் அமர்ந்திருக்க
காத்திருக்கின்றது ஓடை;
சலசலக்கும் மவுனத்துடன்
******************************
ஓய்ந்த மழைநாட்களில்
மரங்கள் நிறைந்த
சாலையில் நடந்துசெல்வோம்;
சுற்றிலும் நீர்த்திவலைகள் வீழ
நமக்கிடையிலான மென்மையை
அசைபோட்டுக்கொண்டு
Labels: உளரல்
இன்னும் இடுகையிட தொடங்கவில்லை,
தொடங்கியதும், தொடர்வேண் திடமாய்....
-- இராஜராஜன்
நன்றி தமிழ் பிரியன் -- கீழே உருளும் வரிகளுக்கு
Copyright 2009 - வனம்