வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

பிரியங்களுடன் ....


தோட்டக் கிணற்றொளியில்
தெரிகின்றன நம் முகங்கள்,
நிர்சலன வானத்திற்கும்
நிலைகொள்ளா இலைகளுக்குமிடையில்
சலனமற்று ;
நமக்கிடையிலான உணர்வுகளுடன்

************************************************************


அடர்ந்த தூங்குமூஞ்சி
மரநிழல்களில் அமர்ந்திருப்போம்.
கால்நெருடும் சருகுகளும்,
உதிர்ந்த சுல்லிகளும்,
எங்கும் நிறைந்திருக்க

*************************************************************


அடர்ந்த ஊதா நிறங்களில்
பூத்துக்கிடக்கும் கரைமேடுகளில்
நாம் அமர்ந்திருக்க
காத்திருக்கின்றது ஓடை;
சலசலக்கும் மவுனத்துடன்

*************************************************************

(நன்றி பதின்மரக்கிளை இந்த படத்தை அவரிடமிருந்து எடுத்தேன்)
ஓய்ந்த மழைநாட்களில்
மரங்கள் நிறைந்த
சாலையில் நடந்துசெல்வோம்;
சுற்றிலும் நீர்த்திவலைகள் வீழ
நமக்கிடையிலான மென்மையை
அசைபோட்டுக்கொண்டு

Blog Widget by LinkWithin