தோட்டக் கிணற்றொளியில்
தெரிகின்றன நம் முகங்கள்,
நிர்சலன வானத்திற்கும்
நிலைகொள்ளா இலைகளுக்குமிடையில்
சலனமற்று ;
நமக்கிடையிலான உணர்வுகளுடன்
******************************
அடர்ந்த தூங்குமூஞ்சி
மரநிழல்களில் அமர்ந்திருப்போம்.
கால்நெருடும் சருகுகளும்,
உதிர்ந்த சுல்லிகளும்,
எங்கும் நிறைந்திருக்க
******************************
அடர்ந்த ஊதா நிறங்களில்
பூத்துக்கிடக்கும் கரைமேடுகளில்
நாம் அமர்ந்திருக்க
காத்திருக்கின்றது ஓடை;
சலசலக்கும் மவுனத்துடன்
******************************
ஓய்ந்த மழைநாட்களில்
மரங்கள் நிறைந்த
சாலையில் நடந்துசெல்வோம்;
சுற்றிலும் நீர்த்திவலைகள் வீழ
நமக்கிடையிலான மென்மையை
அசைபோட்டுக்கொண்டு
பிரியங்களுடன் ....
Posted by
வனம்
வியாழன், 8 ஜனவரி, 2009
Labels: உளரல்
2 comments:
படங்களும் கவிதையும் அருமை நண்பரே..
நன்றி லோகு - தங்கள் கருத்துக்கு.
எண்னுடைய பழைய நண்பரொருவருன் பெயரும் உங்கள் பெயர்தான்
கருத்துரையிடுக
நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா