எதிரியின் உடலறுப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
வன்மையாய் கிழித்துக்கொண்டு
எதிர்பவரின் இரத்தம் குடிப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
இதோ புதிய தலைமுறை
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஆயுதங்கள்
முதல் ஆயுதம் கொடுத்தவன்
முத்துக்குமரன்....
தன் உயிரை உருக்கி
தான் கொண்ட கருத்தில்
வேகமேற்றி எதிர்பவர்களுக்கெதிராய்
விஸ்வரூபம் எடுத்து நின்றான்,
அடுத்து....
மென்மையாய் தன்
கால் காக்கும் காலணியை
ஆயுதமாக்கியவன்
அல் ஜடி
மென்மையை கொண்டு
வலியைத் தரும் ஆயுதம்.
இப்பொழுதெல்லாம் அதிகம்
இது தான் பயன்படுகின்றது
அடுத்தது வருகின்றது
பட்டால் உடைந்துவிடும் ஆயுதம்
சொல்லவா வேண்டும்,
ஆசிட் முட்டையை
அரசியல் அடித்தளமாக்கி வந்தவனை
அடித்தது
அழுகிய முட்டை.
ஆயுதம் செய்வதைவிட
ஆயுதம் பழகுவோம்
நம் எதிர்ப்பை திடமாய் காட்ட
புதிய ஆயுதம் கொள்வோம்
Posted by
வனம்
வியாழன், 9 ஏப்ரல், 2009
5 comments:
ஆயுதம் இல்லாமல் பொட்டலில் வாழும் கிழிந்த காயிதம் போல் வாழும் மக்கள் வீரனென்று சொல்லும் பொட்டைகளே! இஸ்ரேலியரின் வைராக்கியத்தை விட ஆயிர மடங்கு கொண்ட (இந்த நிலையை உருவாக்கியதற்கு நன்றி )மக்களைக் கொண்ட ஈழம் மலரப் போகிறது !!எல்லோருக்கும் அவரர் வினைகளுக்கு எதிர் வினை கிடைக்கப் போகிறது!!!
ஆயுதம் இல்லாமல், பொட்டலில் வாழும் கிழிந்த காயிதம் போல் வாழும் மக்களை, சிங்கள வீரன் என்று சொல்லிக்கொண்டு கொல்லும் சொல்லும் பொட்டைகளே! இஸ்ரேலியரின் வைராக்கியத்தை விட ஆயிர மடங்கு கொண்ட (இந்த நிலையை உருவாக்கியதற்கு நன்றி )மக்களைக் கொண்ட ஈழம் மலரப் போகிறது !!எல்லோருக்கும் அவரர் வினைகளுக்கு எதிர் வினை கிடைக்கப் போகிறது!!!
வணக்கம் நண்பரே
எனக்கும் ஈழம் மலரவேண்டும் என்றுதான் விருப்பம்
மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி
நல்லதொரு கவிதை.
//ஆயுதம் செய்வதைவிட
ஆயுதம் பழகுவோம்
நம் எதிர்ப்பை திடமாய் காட்ட//
கனரகங்களால் காட்டப்பட்ட எதிர்ப்புகளை எங்கள் கண்ணியமான நடைமுறையால் தெரிவிப்போம்.
முத்துக்குமரன் மூட்டிய தீயில் மூசியெழுந்த தமிழகம் தேர்தல் திருவிழாவில் தொலைந்து போய் விட்டது.
மீளவும் முத்துக்குமாரர்கள் வருவார்கள். ஆயுதங்களோடு அல்ல ஆணையோடு....அவர்கள் வழியில் தமிழகம் உயிர்க்கும்.
சாந்தி
பிளாகர் வனம் கூறியது...
வணக்கம் நண்பரே
எனக்கும் ஈழம் மலரவேண்டும் என்றுதான் விருப்பம்
மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி
April 11, 2009 12:56 PM
************************
ஈழத்தமிழருக்கான விடிவு வரவேண்டுமென எண்ணும் உங்கள் போன்ற உணர்வாளர்களால்தான் இன்னும் ஈழத்தமிழர் உயிர்வாழ்கின்றனர். நன்றிகள் உணர்வார்ந்த உங்கள் எண்ணத்திற்கு.
சாந்தி
கருத்துரையிடுக
நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா