வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

நண்பருடன் கதைத்தவை (மனோநிலை)


நானும் நண்பரும் எங்கள் மேளாலருடன் (அவர் ஒரு ஜெர்மனியர்) அன்றைய பணிமுடிந்து அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தோம்.

வரும் வழியில் ஒரு ஹம்மர்(HUMMER) மகிழுந்து எங்களை கடந்து சென்றது, இனி அவர்களின் உரையாடல்.....

மேளாலர் - வண்டியை பார்த்தாயா

நண்பர் - ம்ம்ம் ....... நல்ல வண்டி

எனக்கு இந்த வண்டியை பிடிக்காது

..........................

அதிக வேகம் செல்லாது, நகரத்திற்குள் என்றால் நன்றாக இருக்கும், ஆனால் நெடுஞ்சாலைகளில் வேகம் இருக்காது, மேலும் எரிபொருள் தேவை அதிகம்.

...........................ம்

எனக்கு அயுடி(AUDI) வண்டி பிடிக்கும் அதிகபட்ச வேகம் 250 கி.மீ

...........................


நண்பர் அறைக்கு திரும்பியவுடன் கூறினார்

என்ன தல ஹம்மர் பிடிக்காதுன்றான் என்ன! வண்டி அது.

அவர் விருப்பம் அது

என்ன மாதிரியான வண்டி அது !
அமெரிக்க இராணுவம் அவர்களுக்காக உருவாக்கிய வண்டி

இருக்கலாம் ஆனா அதற்கு அவர் கூறிய காரணங்களும் சரியானதுதானே ?
இருந்தாலும் எப்படிப்பட்ட வண்டி அது !
நம்ம ஊரில் எல்லாம் அதை வாங்கமுடியாம இருக்கின்றனர் என்னால ஒப்புக்கொள்ள முடியாது


முயலுக்கு மூன்று கால்கள் என
தன்கருத்தில் நின்றுகொண்டு
உள்வரும் விமர்சனங்களை
புறங்கையால் விளக்கி விடுகின்றனர்.



1 comments:

Unknown 20 ஜூன், 2009 அன்று 9:45 PM  

//நண்பர் - ம்ம்ம் ....... நல்ல வண்டி//

அமெரிக்கர்களின் மார்கடீங் ரீச்

//எனக்கு அயுடி(AUDI) வண்டி பிடிக்கும் அதிகபட்ச வேகம் 250 கி.மீ//

ஜெர்மனியரின் இனவெறி

இரண்டாலும் பாதிப்பு அடுத்தவருக்கே

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin