என்னதான் வருடத்திற்கு
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.
14 comments:
ஆகா! நிலாச்சோறு உண்பதில்தான் எத்தனை ஆனந்தம்! அதோடு காதலியும் கூட இருந்தால் கேட்கவா வேண்டும்.
தங்களை பதிவர் (தி.நகரில் நடைபெற்ற)சந்திப்பில் சந்தித்திருக்கிறேன். வனம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்போவதாக கூறினீர்கள். இப்போதுதான் தங்கள் வனத்திற்கு வரமுடிந்தது. வாழ்த்துகள்!
நன்றி குடந்தை அன்புமணி
தொடர்ந்து வாருங்கள்
இராஜராஜன்
உங்கள் தளத்தை நான் திறக்கையில் எந்த பிரச்சனையும் எழவில்லையே?? நீங்கள் பென்சில் தளத்தில் குறிப்பிட்டிருந்தவாறு எந்த தளமும் தவறாகத் திறக்கவில்லையே?
அப்படித் திறப்பதானால் அது என்ன தளமென்றூ கூறுங்கள்
நன்றி ஆதவா
ம்ம்ம் இன்று சரியாக இருக்கின்றது
தங்களின் உதவிக்கு நன்றி
இராஜராஜன்
உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.
நிலாச்சோறு யாருக்குதான் பிடிக்காது.
உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.
நிலாச்சோறு யாருக்குதான் பிடிக்காது.
\\ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்\\
ஆஹா! என்ன ஒரு சந்தோஷ நிலை
அதில் எங்கோ இருந்து உண்ணும் எங்களையும் வான் வழி சேர்ந்திருப்போம் என்று ...
அருமைங்க
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.
கண்டிப்பாக அது தான் உண்மையான சந்தோஷ நிலை
அழகிய கவிதை
வணக்கம் முத்துராமலிங்கம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இராஜராஜன்
நன்றி ஜமால்
எப்போதும் நட்புடன் இருப்போம்
வணக்கம் சக்தி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இராஜராஜன்
பவுர்ணமிப் பொழுதில் ஊரில் உறவுகளோடு கழிந்த காலங்கள் போய் புலத்தில் எல்லாம் இழந்து அனாதைகளாய்ப் போனோம்.
!!மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.!!
இனிய அனுபவம்.
சாந்தி
வாங்க சாந்தி ரமேஷ்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இராஜராஜன்
கருத்துரையிடுக
நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா