வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

மின்சாரம் அற்றுப்போன இரவு

மின்சாரம் அற்றுப்போன இரவு



எதுவும் சரியாய் தெரியாமல்
தட்டித்தடவிதான் செய்யவேண்டியிருக்கின்றது
''இப்படியே இருந்துவிட்டால்...''
எண்ணமே பயம்கொள்ள வைக்கிறது,
காற்றுகூட வராமல் புழுக்கத்தில்
வேலையே ஓடமாட்டேங்கிறது
என்றாலும் ;


பூதமாய் நம் நிழல்கள் விரிய
லாந்தர் விளக்கொளியில்
இங்குமங்கும்
அலைந்து கொண்டிருப்பதும்
நன்றாய்தான் இருக்கிறது






8 comments:

சாந்தி நேசக்கரம் 19 ஜூலை, 2009 அன்று 9:54 AM  

இரவு மீதும் இருள் மீதும் அத்தனை பிரியமா ?

மின்சாரம் இல்லாத இரவில் மெழுகுவர்த்தியோடு வாழ்தல் கூட இனிமைதான்.

சாந்தி

வனம் 20 ஜூலை, 2009 அன்று 10:33 PM  

வாங்க அக்கா

ம்ம்ம்ம் இரவும், தனிமையும்தானே நம்மை நமக்குள் செல்ல அனுமதிக்கும்.

அதுவும் இல்லாமல் ஒரு இரவுப் பறவையாக இரவில் தூங்காமல் விழித்திருக்கும் எனக்கு அதுதான் சாஸ்வதம்
இராஜராஜன்

Unknown 11 ஆகஸ்ட், 2009 அன்று 7:32 AM  

''இப்படியே இருந்துவிட்டால்...''


மாற்றம் ஒன்றே மாறாதது.

க.பாலாசி 20 ஆகஸ்ட், 2009 அன்று 5:30 AM  

நல்ல ஆதங்கமான பகிர்வு அன்பரே...

நிறைய எழுதுங்கள், தொடர காத்திருக்கிறேன்.

வனம் 21 ஆகஸ்ட், 2009 அன்று 11:01 PM  

வணக்கம் என் பக்கம்

ஆம் மாற்றமே மாறாதது

வனம் 21 ஆகஸ்ட், 2009 அன்று 11:02 PM  

வணக்கம் பாலாஜி

தொடர்ந்து வாருங்கள்

shankar 20 செப்டம்பர், 2009 அன்று 6:44 AM  

minsaram illai endral naan ungal idam karathu sola mudiaathu...

வனம் 21 செப்டம்பர், 2009 அன்று 9:21 PM  

வணக்கம் சங்கர்
\\minsaram illai endral naan ungal idam karathu sola mudiaathu... \\

ம்ம்ம் சரிதான், எல்லாம் வேண்டியிருக்கின்றது
கருத்துக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin