நான் வளர்ந்தது சென்னை, இப்போது ஒரு வருடமாக இருப்பது பெங்களூரு (சிலர் பெண்களூர்-னு எல்லாம் சொல்லுராங்க அதப்பத்தி எனக்கு தெரியாது)
பெங்களூரிலும் சரி சென்னையிலும் சரி நமக்கு அதிகம் தொடர்பு இருக்கின்றது இந்த (சிட்டி பஸ் சர்வீஸ்) மாநகர பெருந்துகள்தான்.
பொதுவாகவே எனக்கு இந்த ஒப்புநோக்கும் பழக்கம் நமக்கு அதிகம் எதையும் ஏன் இப்படி இருக்கு, எப்படி இந்த விடயங்கள் நடக்குது (நாங்கள் எல்லாம் சாக்ரடீஸின் மாணவராக்கும்) என்று யோசித்துக்கொண்டு இருப்பேன்.
இதில் எனக்கு பெங்களூரில் மிகவும் பிடித்தது அங்கு இருக்கும் இந்த "BMTC" -னு அழைக்கப்படும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (Bangalore Metropolitan Transport Corporation). இவர்களின் அனுகுமுறை ரோம்ப நல்லா இருக்கு. முதலில் இவ்வளவு கூட்ட நெரிசல் இருக்கும் போதும் அந்த வாசல் கதவுகள். அதனால் இந்த படியில் தொங்கிக்கொண்டு பயணித்தல் (foot board travel சென்னையில் இந்த படியில் போவதில் நிறைய அரசியல் வைத்திருக்கின்றார்கள்) என்பது இல்லை மற்றும் பாதுகாப்பான பயணம்
எனக்கு தெரிந்து பெங்களூரில் பேருந்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்கள் இல்லை ஆனா பெங்களுர் பெருந்து ஓட்டுநர்கள் இயக்கும்விதம் தனி சாலையில் இருக்கும் மற்றவர்களுக்கு இவர்தான் சென்னை தண்ணீர் லாரி போன்றவர்கள் இங்க இருக்கின்றவர்கள் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரவங்க இல்ல பஸ் ஓட்டுரவங்க.பார்முலா 1 பந்தையங்களில் கூட இங்கு செல்வதுபோல் நெருக்கமாகவும் என்னை நீ முந்திவிடுவாயா என இரு பேருந்துகளுக்கு இடையில் போட்டியும் இருக்காது.
பேருந்து வகைகள் என பார்த்தால்
௧. நீலம் மற்றும் வெள்ளை நிறம் - இவை சாதாரண பெருந்து வகையில் வரும்
௨. சுவர்ணா பேருந்து வெள்ளி நிறத்தில் இருக்கும் - இவையும் சாதாரண பெருந்துதான் ஆனால் முதல் வகையை காட்டிலும் கொஞ்சம் கட்டணம் அதிகம்
௩.புஸ்பக் (Pushpak) பேருந்து - இதில் ஒற்றை கதவு மட்டும் இருக்கும் நடத்துனர் இருப்பதில்லை ஒட்டுநரே பயணச்சீட்டையும் கொடுத்துவிடுவார் பயண அட்டை (Bus Pass) வைத்திருப்பவர்களுக்கு இவை உகந்தது.
௪. வஜ்ரா (Vajra) பெருந்து - இவை குளிர்சாதன பேருந்து
௬.வாயு வஜ்ரா (Vayu Vajra) - இவை விமான நிலையத்திற்கு என்றே இயக்கப்பபவை கட்டணம் 50 லிருந்து 150 வரை
௭. இப்போது பிக் தடம் ("big route" ) என்று அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள் இவற்றில் கட்டணம் கொஞ்சம் அதிகம் அவை
௮. Big 10 - இவை புரநகர் பகுதிகளை இணைக்கின்றது
௯.Big circle - இவை புற வழிச்சாலைகளை இணைப்பவை.
சென்னையைவிட சிறிய நகரமான பெங்களூரில் அதிகமான பொது பேருந்துகள் இயக்கப்படுகின்றன மேலும் இங்கு பேருந்தில் கூட்ட நெரிசல் குறைவு.
இதைவிட இன்னும் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கின்றது. நம் சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் தவறவிட்ட ஒரு விடயம் பற்றி அடுத்த பதிவில்
(பதிவு ரோம்ம்ம்ம்ம்ம்ப பெரிதாக இருப்பதாக தோன்றியதால் )
உசாத்துணை : wikipedia
<--<<நெஞ்சுக்குள் நெருப்புடன் இருப்பதே ......... வாழ்வு>>-->
மாநகர போக்குவரத்து கழகம்
வண்ணதாசன்....
என் ரோம்பநாள் ஆசை வண்ணதாசன் பற்றி எழுதவேண்டும் என்பது.
இயற்பெயர் : கல்யாணசுந்தரம்.
கதைகளுக்கு : வண்ணதாசன்.
கவிதைகளுக்கு : கல்யாண்ஜி
வலைப்பூ : http://kalyaanji.blogspot.com (இது இப்போது இயங்கவில்லை)
விக்கி சுட்டி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
இவர் 80-களில் எழுதத் தொடங்கி இன்றும் எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு இளம் (என்னைப்பொருத்தவரையில்) படைப்பாளி.
இவரின் கதைகளும், கவிதைகளும் எப்போதும் அதிகபட்ச அன்பையே அடிநாதமாக கொண்டிருக்கும். ஒரு மிகச்சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு அதை மிக அழகாக படிப்பவரின் உள்ளத்தில் ஒரு மென்மையையும், அன்பையும் நிலைநிறுத்துவதில் இவருக்கு நிகர் எனக்கு தெரிந்து வேறு யாறுமில்லை. இவரின் கதைகளும் சரி கவிதைகளும் சரி இரண்டுமே நம்மைச்சுற்றி அன்பானவர்கள் தவிர வேறு யாறும் இல்லை எனும் நிணைப்பை நமக்குள் விதைக்கும்.
இவரின் கடிதத்தொகுப்பான "எல்லோருக்கும் அன்புடம்" - ம் இவரின் கவிதை போலவே மிக அன்பானதாய் இருக்கும். இவர் தன் ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும் வாக்கியமான எல்லோருக்கும் அன்புடன் என்பதே இவரின் ஆளுமையை எல்லோருக்கும் சொல்லும்படியாக இருக்கும்.
இவரின் கதைகள் எனக்கு அறிமுகமானது எனது பதின்ம வயதுகளில் "புளிப்பு கனிகள்" இவர் 80 -ன் தொடக்கத்தில் எழுதிய இந்த கதையை படித்தது 94-ல் தினமனி நாளிதழின் ஞாயிற்று கிழமைகளில் வரும் தினமனி கதிர் -ல். இந்த கதையை படித்த பிறகுதான் நான் இது போன்ற புத்தகங்களில் வரும் எனக்கு பிடித்த கதை, கவிதை, துணுக்குகளை சேகரிக்கும் பைத்தியம் பிடித்தது.
இந்த கதையில் ஒரு அழகிய கிராமத்து பெண்னின் வாழ்வை வேறொரு ஆணின் பார்வையில் சொல்லியிருப்பார். இன்னும் என்னால் அந்த மண் வீதியில் உருண்டு ஓடும் போகன்வில்லா பூவை மறக்க முடிவதில்லை - இப்போது இந்த கதை இருந்த பக்கங்கள் என்னிடம் இல்லை.
இவரின் இன்னுமொரு கதை "அப்பாவை கொன்றவன்" ஒரு குடும்பத்தலைவனை கொன்றவனின் மனம் என்னவாகும் என விவரித்து இருப்பார் கொலையானவனின் பெண்னை எல்லோரும் அவள் தாயின் பெயரை குறிப்பிட்டு அழைக்கும்போது அவர் மட்டும் அந்த பெண்னை அவளின் தகப்பனின் பெயர் கொண்டு அழைக்கும் அந்த ஒற்றை வார்த்தை தரும் உணர்வுகளே அந்த முழு கதையும்
இவரின் வரிகள் நம்மை ஒரு இயல்பான மாய உலகத்திற்கு இட்டுச்செல்லும்.
"காற்றின் அனுமதி" ஒரு மிக இயல்பான கதை ஒரு காலையில் தன் குழந்தையை நடக்க அழைத்துச்செல்லும் ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உரையாடல்கள்தான் கதையே
"மரங்கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் , இருக்கும்படியான நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துதான் வருகின்றது"
மேலும் "நடுகை, தனுமை, பாபசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும்" இப்படி நிறைய.........
அவறைப்பற்றி எழுத்த தொடங்கினால் நீண்டுவிடுகின்றது.
மற்றொருமுறை அவரின் கவிதைகளுடன் பார்ப்போம்.
Labels: என்னை கவர்ந்தவர் , கதை , கல்யாண்ஜி , வண்ணதாசன்
நிராகரிப்பு
கலந்து வாழ்வதாய்
நாமெடுத்த முடிவை
என்னுடன் கலக்காமலே நீ
முறித்துச் சென்றபின்
நான்......
பங்கேற்காத போரில்
தோற்றுவிட்ட அரசன்
விழும் வேகத்தில்
உயிராய் பற்றிய கயிறு
சிலந்தி நூலாய் போனவன்
வனாந்திரங்களில் ஏகாந்தமாய்
கூவித்திரிய வேண்டிய
குயிலின் நெறிந்த குரல்வலை
சிரிப்பற்று போன
முகத்தின் விலாசமானவன்.