வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

மாநகர போக்குவரத்து கழகம்

நான் வளர்ந்தது சென்னை, இப்போது ஒரு வருடமாக இருப்பது பெங்களூரு (சிலர் பெண்களூர்-னு எல்லாம் சொல்லுராங்க அதப்பத்தி எனக்கு தெரியாது)

பெங்களூரிலும் சரி சென்னையிலும் சரி நமக்கு அதிகம் தொடர்பு இருக்கின்றது இந்த (சிட்டி பஸ் சர்வீஸ்) மாநகர பெருந்துகள்தான்.

பொதுவாகவே எனக்கு இந்த ஒப்புநோக்கும் பழக்கம் நமக்கு அதிகம் எதையும் ஏன் இப்படி இருக்கு, எப்படி இந்த விடயங்கள் நடக்குது (நாங்கள் எல்லாம் சாக்ரடீஸின் மாணவராக்கும்) என்று யோசித்துக்கொண்டு இருப்பேன்.

இதில் எனக்கு பெங்களூரில் மிகவும் பிடித்தது அங்கு இருக்கும் இந்த "BMTC" -னு அழைக்கப்படும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (Bangalore Metropolitan Transport Corporation). இவர்களின் அனுகுமுறை ரோம்ப நல்லா இருக்கு. முதலில் இவ்வளவு கூட்ட நெரிசல் இருக்கும் போதும் அந்த வாசல் கதவுகள். அதனால் இந்த படியில் தொங்கிக்கொண்டு பயணித்தல் (foot board travel சென்னையில் இந்த படியில் போவதில் நிறைய அரசியல் வைத்திருக்கின்றார்கள்) என்பது இல்லை மற்றும் பாதுகாப்பான பயணம்

எனக்கு தெரிந்து பெங்களூரில் பேருந்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்கள் இல்லை ஆனா பெங்களுர் பெருந்து ஓட்டுநர்கள் இயக்கும்விதம் தனி சாலையில் இருக்கும் மற்றவர்களுக்கு இவர்தான் சென்னை தண்ணீர் லாரி போன்றவர்கள் இங்க இருக்கின்றவர்கள் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரவங்க இல்ல பஸ் ஓட்டுரவங்க.பார்முலா 1 பந்தையங்களில் கூட இங்கு செல்வதுபோல் நெருக்கமாகவும் என்னை நீ முந்திவிடுவாயா என இரு பேருந்துகளுக்கு இடையில் போட்டியும் இருக்காது.

பேருந்து வகைகள் என பார்த்தால்

௧. நீலம் மற்றும் வெள்ளை நிறம் - இவை சாதாரண பெருந்து வகையில் வரும்

௨. சுவர்ணா பேருந்து வெள்ளி நிறத்தில் இருக்கும் - இவையும் சாதாரண பெருந்துதான் ஆனால் முதல் வகையை காட்டிலும் கொஞ்சம் கட்டணம் அதிகம்

௩.புஸ்பக் (Pushpak) பேருந்து - இதில் ஒற்றை கதவு மட்டும் இருக்கும் நடத்துனர் இருப்பதில்லை ஒட்டுநரே பயணச்சீட்டையும் கொடுத்துவிடுவார் பயண அட்டை (Bus Pass) வைத்திருப்பவர்களுக்கு இவை உகந்தது.

௪. வஜ்ரா (Vajra) பெருந்து - இவை குளிர்சாதன பேருந்து

௬.வாயு வஜ்ரா (Vayu Vajra) - இவை விமான நிலையத்திற்கு என்றே இயக்கப்பபவை கட்டணம் 50 லிருந்து 150 வரை

௭. இப்போது பிக் தடம் ("big route" ) என்று அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள் இவற்றில் கட்டணம் கொஞ்சம் அதிகம் அவை

௮. Big 10 - இவை புரநகர் பகுதிகளை இணைக்கின்றது

௯.Big circle - இவை புற வழிச்சாலைகளை இணைப்பவை.

சென்னையைவிட சிறிய நகரமான பெங்களூரில் அதிகமான பொது பேருந்துகள் இயக்கப்படுகின்றன மேலும் இங்கு பேருந்தில் கூட்ட நெரிசல் குறைவு.

இதைவிட இன்னும் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கின்றது. நம் சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் தவறவிட்ட ஒரு விடயம் பற்றி அடுத்த பதிவில்

(பதிவு ரோம்ம்ம்ம்ம்ம்ப பெரிதாக இருப்பதாக தோன்றியதால் )

உசாத்துணை : wikipedia

<--<<நெஞ்சுக்குள் நெருப்புடன் இருப்பதே ......... வாழ்வு>>-->

5 comments:

Unknown 18 நவம்பர், 2009 அன்று 12:06 AM  

பெங்களூர் பக்கம் எட்டிபார்த்து
பல வருசம் ஆச்சு.
இப்ப IISc canteen & Underground
மாத்திறம் தான் நியாபகம் இருக்கு
http://vaarththai.wordpress.com

நசரேயன் 18 நவம்பர், 2009 அன்று 1:44 PM  

//பதிவு ரோம்ம்ம்ம்ம்ம்ப பெரிதாக இருப்பதாக தோன்றியதால்//
அப்படியா !!!!!!!!!

Thamira 22 நவம்பர், 2009 அன்று 5:59 AM  

எனக்கு தெரிந்து பெங்களூரில் பேருந்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்கள் இல்லை ஆனா பெங்களுர் பெருந்து ஓட்டுநர்கள் இயக்கும்விதம் தனி சாலையில் இருக்கும் மற்றவர்களுக்கு இவர்தான் சென்னை தண்ணீர் லாரி போன்றவர்கள் இங்க இருக்கின்றவர்கள் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரவங்க இல்ல பஸ் ஓட்டுரவங்க.பார்முலா 1 பந்தையங்களில் கூட இங்கு செல்வதுபோல் நெருக்கமாகவும் என்னை நீ முந்திவிடுவாயா //

புள்ளி, கமா ஏதுமில்லாமல் தலைசுத்துது. என்ன சொல்ல வர்றீங்க என்றே புரியவில்லை. ஆங்காங்கே எழுத்துப்பிழைகளும் உள்ளன. சரி செய்துகொண்டால் நன்றாகயிருக்கும். எழுதியபின்னர் பதிவிடும் முன்னர் பலமுறை வாசித்தால் இவற்றைத் தவிர்க்கலாம்.

வாழ்த்துகள்.!

ஜோதிஜி 23 ஜனவரி, 2010 அன்று 5:22 AM  

படத்தில் பார்த்த உருவம் நேரில் பார்த்த போது எண்ணங்கள் மாறியது.

தேடி வந்த போது உண்டான புரிதல்கள் மொத்தமும் புதிய பாதை புதிய நோக்கத்தை உருவாக்கியது.

எழுத்துகள் என்பது உள் மன எண்ணம் எனில் இந்த வாழ்க்கையில் உங்களை சந்திக்க வைத்த நீங்கள் எப்போதும் நம்பாத அந்த உயர்சக்திக்கு நன்றியை இங்கு பதிய வைக்க விரும்புகின்றேன்.

என்னுடைய தரம், என்னுடைய தடம் அத்தனையிலும் இந்த வனமும், தமிழர்களின் தடமான ராஜராஜன் அன்பும் கடைசி மூச்சு வரைக்கும் நிறைந்து இருக்கும்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

புரிந்துவர்களுக்கு நீங்கள் பொக்கிஷம்?

ஜோதிஜி 23 ஜனவரி, 2010 அன்று 5:23 AM  

குறைவாக எழுதுபவர்கள் நிறைவாக சிந்திப்பவர்கள்.

சிந்தனைகளுடன் உதவியும் உபகாரமுமாய் வாழும் உங்கள் வாழ்க்கை முழுக்க மலர் வனமாய் இருக்கட்டும்.

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin