தசாப்தங்கள் பழகியபின்
கலந்து வாழ்வதாய்
நாமெடுத்த முடிவை
என்னுடன் கலக்காமலே நீ
முறித்துச் சென்றபின்
நான்......
பங்கேற்காத போரில்
தோற்றுவிட்ட அரசன்
விழும் வேகத்தில்
உயிராய் பற்றிய கயிறு
சிலந்தி நூலாய் போனவன்
வனாந்திரங்களில் ஏகாந்தமாய்
கூவித்திரிய வேண்டிய
குயிலின் நெறிந்த குரல்வலை
சிரிப்பற்று போன
முகத்தின் விலாசமானவன்.
கலந்து வாழ்வதாய்
நாமெடுத்த முடிவை
என்னுடன் கலக்காமலே நீ
முறித்துச் சென்றபின்
நான்......
பங்கேற்காத போரில்
தோற்றுவிட்ட அரசன்
விழும் வேகத்தில்
உயிராய் பற்றிய கயிறு
சிலந்தி நூலாய் போனவன்
வனாந்திரங்களில் ஏகாந்தமாய்
கூவித்திரிய வேண்டிய
குயிலின் நெறிந்த குரல்வலை
சிரிப்பற்று போன
முகத்தின் விலாசமானவன்.
11 comments:
chance illa
semma kavidhai
அட்டகாசம்...
வாங்க சொர்னவல்லி (பெயர் சரிதானா? )
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
வாடிக்கையாக வந்து போங்கள்.
நன்றி
வாங்க கலையரசன்
தங்களின் கருத்துக்கு நன்றி
அடிக்கடி வாங்க
நன்றி
//வனாந்திரங்களில் ஏகாந்தமாய்
கூவித்திரிய வேண்டிய
குயிலின் நெறிந்த குரல்வலை
//
பின்னிட்டீங்க தல.....
நல்லாயிருக்கு கவிதை.
Keep Going!!!!!!1
வாங்க மகேஷ்
நன்றி
கொஞ்சம் சோம்பேரித்தனம் தொடருவேன்
வாங்க புலிகேசி
கருத்துக்கு நன்றி
எனக்குள் வரலாற்றை கிளறும் பெயர் உங்களுடையது.
அந்த இரண்டாம் புலிகேசி சார்ந்து ஒரு இடுக்கை காத்திருக்கின்றது.
வனத்தை பார்க்க அடிக்கடி வாங்க
நன்றி
அருமையான வரிகள்
கருத்துக்களுக்கு நன்றி சந்ரு
நன்றி
சிரிப்பற்று போன
முகத்தின் விலாசமானவன்.//
விலாசமானேன்.. என்று இருந்திருக்கவேண்டுமோ.?
கருத்துரையிடுக
நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா