திடீரென படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் தெரியாமல் இருட்டு, சட சட வென சப்தம், உடல் புல்லரிக்க குளிர்ச்சி வந்து சூழ்ந்து கொண்டது
அள்ளிக்கோண்டு வருகின்றது மண்வாசனை
ஏதும் புரியாமல் சாளரம் திறந்து பார்த்தால்......
வெளியெங்கும் பரந்து பெய்துகொண்டிருந்தது மழை.
திரும்பி உள்பார்த்தால் குறுஞ்சிரிப்புடனும் கையில் டீ கோப்பையுடனும் ஐன்னல் திண்டில் அமர்ந்திருந்த என் கால் கட்டி உட்காருகின்றாய்
'' யாரடி சொல்லியது நாக்குசுடும் சூட்டுடன் டீ குடித்துக்கொண்டு மழை பார்க்க பிடிக்குமெனக்கு என்று....''
எல்லாவற்றையும் கழுவிய மழை நம்முள்ளும் எதையோ கழுவிவிட்டது வெளி போலவே உள்ளும் குளிர்ச்சி,
நீட்டிய என் கைக்குள் கோர்த்துக்கொள்கின்றன உன் கைகள் உள்ளுக்குள் இறங்கிய குளிர்ச்சி கண்களில் தெரிய
மழை நமக்கு வரம் தரும்
அன்போடு இருக்க
இதமான குளிரிலும்
கடும் சூட்டிலும்
சேர்ந்து இருக்க
கோர்த்த கைகள்
பிரியாமல் இருக்க
அன்போடு இருக்க
இதமான குளிரிலும்
கடும் சூட்டிலும்
சேர்ந்து இருக்க
கோர்த்த கைகள்
பிரியாமல் இருக்க
6 comments:
கவிதையான கதை. ரசனையா எழுதி இருக்கீங்க. ரசித்தேன்.
நன்றி முத்துராமலிங்கம்
தங்கள் கருத்துக்கு
கவிதையும், படமும் சூப்பர் அண்ணா.
//
'' யாரடி சொல்லியது நாக்குசுடும் சூட்டுடன் டீ குடித்துக்கொண்டு மழை பார்க்க பிடிக்குமெனக்கு என்று....''
//
நன்றாயிருக்கிறது.
இரசிக்கிறேன்
நன்றி தமிழ்நெஞ்சம்
சந்தடி சாக்குள அண்ணானுடிங்களே, நண்பர்களாய் இருப்போம்
நன்றி வலசு
இரசனைதானே நம்மை உயத்தும்.
கருத்துரையிடுக
நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா