வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

முத்துராமலிங்கம் கிளரியவை

நண்பர் பதின்மரக்கிளை எழுதிய
தவறிய நாணயமும் சிதறிய நாகரீகமும். பதிவை படித்தபிறகு எனக்குள் எழுந்தவை

முதலில் அவரின் இந்த பதிவின் பல கருத்தாக்கங்களை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்

நம் சுயத்தை இயல்பை பன்பை அத்தனையும் தொலைத்து விட்டு எந்த நாகரீகத்தில் அம்மனமாக நிர்க்க போகிறோம்.
என்ற கேள்வி எனக்குள்ளும் இருக்கின்றது.

இந்த நாகரீகம் எங்கிருந்து வந்ததோ அங்கும் இப்படிதான் இருக்குமா? தெரியவில்லை. எனும் வரிகளின் வாயிலாக இந்த விடயங்கள் வேறு எங்கோ இருந்து வந்தது பொன்ற மாயை தோன்றுவதாக உணர்கின்றேன்

நாகரீகம் என்றும்; வழக்கம், பண்பாடு என்றும் நம் மண்டைக்குள் ஆணி அரைந்து யோசிக்கும், சிந்திக்கும் அறிவை குறைத்தது யார்?

இந்த முறைமைகள் வேறு எங்கிருந்தும் வரவில்லை, இங்கிருந்தே, நமக்குள்ளிருந்தே வந்தது.

அடுத்தவர் என்ன சொல்வார், என்ன நிணைப்பார் என இந்த இந்திய நாகரீகம் நமக்குள் திணித்தது எவ்வளவு?

சில நாட்களுக்கு முன் தினசரியில் வந்தது--
சென்னையில் குடி போதையில் மனைவி இல்லாதபோது தன் 20 வயது மகளையெ வன்புணர்ந்த தந்தை.

போதையில் இருக்கும் 40+ வயதுடைய ஒரு ஆணுடன் போராட முடியாத தைரியத்தை எந்த பண்பாடு கற்றுக்கொடுத்தது?

தன்னுடைய உடல் பசிக்கு தான் உரவுகொள்ளும் பெண்னின் சம்மதம் தேவையில்லை என நிணைக்கும் அந்த ஆண் இத்தனை காலம் தன் மனைவியோடு எப்படி இருந்திருப்பார்-- கணவனால் வன்புணரப்படும் கொடுமைகளை இத்தனை காலம் பொருத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது எங்கிருந்து?

எல்லாம் நமக்குள்ளிருந்து வந்ததுதான்.

உள்ளத்தில் ஒளியிருந்தால் எல்லாம் நன்றாய் நடக்கும்.

6 comments:

ஆ.சுதா 27 ஏப்ரல், 2009 அன்று 4:28 AM  

திரு. இராஜராஜன் சார்
உங்கள் பதிவை எதிற்பாரத்தேன்
பதிவிட்டதற்கு நன்றி.

//முதலில் அவரின் இந்த பதிவின் பல கருத்தாக்கங்களை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்//

ஏற்றமைக்கும் நன்றி.

//இந்த நாகரீகம் எங்கிருந்து வந்ததோ அங்கும் இப்படிதான் இருக்குமா?//

இதிலிருந்து உங்கள் கருத்து வேறுபட்டு
அதன் கூறுகளை சொல்ல முற்படுகிறீரகள். உங்கள் கூற்றுகளை நானும் ஏற்கிறேன்.

இன்னும் விரிவாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

Pradeep 27 ஏப்ரல், 2009 அன்று 9:32 AM  

நல்ல கருத்து. நல்ல பதிவு.

வனம் 27 ஏப்ரல், 2009 அன்று 9:37 PM  

நன்றி முத்துராமலிங்கம்

சரியாகவே புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்,

இன்னும் விரிவா எழுதியிருக்கலாம் -- கருத்து தெளிவில்லாமல் போய்விடுமோ என அச்சமாக இருந்தது



தயவு செய்து சார் வேண்டாமே,

வனம் 27 ஏப்ரல், 2009 அன்று 9:38 PM  

கருத்துக்கு நன்றி பிரதீப்

ஜோதிஜி 26 அக்டோபர், 2009 அன்று 2:19 AM  

நீண்ட நாட்களுக்குப்பிறகு. நன்றி. விமர்சனமும் சரி இடுகையில் உள்ள கருத்துக்களும் சரி ( உள்ளத்தில் ஒளி இருந்தால்) பட்டவர்த்தனமாக முகத்தில் அறைவது போல் இருக்கிறது. ஆமாம் யோசிக்க தெரிந்தால் உண்மை மட்டும் தான் வெளியே முதலில் வரும்.

வனம் 26 அக்டோபர், 2009 அன்று 2:31 AM  

வாங்க ஜோதிஜி

வருகைகும் கருத்துக்களுக்கும் நன்றி

அடிக்கடி வாங்க
எப்படியும் எப்பவாவது பதிவிடுவேன், விமாட்டேன்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin