வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

நண்பருடன் கதைத்தவை (குஷ்பு இட்லி) 15+ வயதுடையவர்கள் மட்டும்

நானும் நண்பரொருவரும் உணவகத்திற்கு சென்றிருந்தோம் அங்கு எனக்கு குஷ்பு இட்லி சொன்னேன். நண்பர் சிரித்தார், ஏன் என்றதற்கு

ஆமா இதுக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா ? -- நண்பர்

குஷ்புமாதிரி இருக்கின்றதால் -- நான்

குஷ்புமாதிரி என்ன ?

ம்ம்ம்ம்...........

என்னப்பா பதிலக்கானும் ?

என்னத்த சொல்ல............. வைரமுத்துவின் வார்த்தையில் சொல்லனும்னா கழுத்துக்கு கீழ் கவிதைகள் இரண்டுனு சொல்லலாம்.

ஆமா ஒரு சாப்பிடும் பொருளுக்கு எதை உவமையாக வைத்து பெயரிடுகின்றீர்கள் ?
இது சரி என நிணைக்கின்றீர்களா ?

மனிதர் விடமாட்டார் கேள்வினு வந்தால் வரிசையாக கேட்டுகிட்டே இருப்பார், என்ன கடைசியில் ஏதேனும் விடயம் இருக்கும்

அதனால் சரணடைந்து விடுவதே உத்தமம்.
சரி சொல்லுங்க எனக்கு அந்த இட்டலி பிடித்திருக்கின்றது (அய்யொ.... கண்டிப்பா அந்த பேருக்காக இல்ல. -- ஆமா இப்பவே சொல்லிட்டேன்.)

இல்லை உணவையும், காமத்தையும் சம்மந்தப்படுத்துரிங்களே அதான் கேட்டேன் -- நண்பர்

..............................எல்லாம் ஒரு கிளுகிளுப்புத்தான்

காமத்தை வாழத்தெரியாமல், குதறிவைக்கின்றீர்களே.

...........................................


தற்போதைய இந்திய காமம் ஒரு அதி உணர்சியாக குறிக்கப்படுகின்றது.
நம்முடைய திரைப்படங்களில் காட்டப்படுவது என்ன ?
ஒரு சராசரி தமிழரின் காமம் சார்ந்த உரையாடல்கள் எப்படி இருக்கின்றன ?

( அடங்கொய்யா மறுபடியும் அரம்பிச்சுட்டான்யா இரயில் மாதிரி கேள்வி கேக்க .... முடியலயே அதான் முதலிலே சரண் ஆயிடம்ல, சொல்ல வந்தத சொல்லுயா -- என்ன பண்னுரது மனசுக்குள்ளத்தான் கேக்கமுடியும் )

ஒரு அதியுச்ச அவசரத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றது.

ஒரு துப்பட்டா போடாத பெண்ணைப்பார்த்ததும் காமுறும் மனதுள்ளவர்களாகவே நாம் கட்டுறுத்தப்படுகின்றோம்.
நான் அவளை அடையனும்டா.... எனும் வகையான சொல்பிறையோகங்கள்தான் இருக்கின்றன
காதல் காட்சிகளில்கூட நீ எனக்கு வேனும் எனதான் கேட்கப்படுகின்றது.

அதான் சொல்கின்றேன் காமத்தோடு நமக்கு வாழத்தெரியவில்லை, காமம் என்பதை அனுபவித்தல் எனும் பாவணையில்தான் பார்கின்றொம்.

காமத்தில் கரையவேண்டும், காமத்தில் திளைக்கனும், காமத்தில் வெறியேரக்கூடாது.

அவர்பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்

ம்ம்ம்ம்

ஆமாம், நாம் பொதுவாக அன்பின் வழி காமவயப்படுவது இல்லை. வாத்சாயனார், திருவள்ளுவர், ஆண்டாள்னு அழகா பதிந்துவிட்டு போயிருக்காங்க

ஒரு தவம்போல்
காமத்தில், காதலில் திழைத்திருக்கும்
வழியரியாமல் மீன்
கொத்தும் கொக்குகளாய் இருக்கின்றொம்


அதென்ன 15+ வயதுடையவர்கள் மட்டும் உனக்கென தனியாக தரம் இருக்கின்றதா என கேட்பது தெரிகின்றது.

ஏதோ என்னால முடிஞ்சது 15 வயதிலேயே நம்ம பிள்ளைகள் இதைப்பற்றி யோசிக்க தொடங்கிவிடுகின்றனர் அதான்.

<--<<நெஞ்சுக்குள் நெருப்புடன் இருப்பதே ......... வாழ்வு>>-->

12 comments:

Unknown 23 ஆகஸ்ட், 2009 அன்று PM 10:43  

அருமையான இடுகை நன்பரே

//ஒரு அதியுச்ச அவசரத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றது.//

அமாம் அப்படிதான் மாறியிருகிறது. எப்படி சரி செய்வது?

//காமத்தில் கரையவேண்டும், காமத்தில் திளைக்கனும், காமத்தில் வெறியேரக்கூடாது.//

அமாம்.

//ஒரு தவம்போல்
காமத்தில், காதலில் திழைத்திருக்கும்
வழியரியாமல் மீன்
கொத்தும் கொக்குகளாய் இருக்கின்றொம்//

அருமை.

வனம் 23 ஆகஸ்ட், 2009 அன்று PM 11:08  

வணக்கம் என் பக்கம்.

\\//ஒரு அதியுச்ச அவசரத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றது.//

அமாம் அப்படிதான் மாறியிருகிறது. எப்படி சரி செய்வது?\\

எனக்கு அனுபவம் இல்லை நண்பரே, எனக்கு சிந்திக்கத்தான் முடியும் உணர முடியாது.
சிந்தனையின் வழி நான் உணர்வது இருவரின் மனதும் தான் உடலோடு செர்ந்து படுக்கையில் சந்திக்கனும்

உடல்மட்டும், உடல்தேவையை மட்டும் சார்ந்து சந்திப்பது சரியாக இருக்காது என நிணைகின்றேன்.

நன்றி

ஆமா எப்படி உடனே கருத்திட இயலுகின்றது உங்களால்

இராஜராஜன்

க.பாலாசி 25 ஆகஸ்ட், 2009 அன்று AM 5:27  

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு அன்பரே...

அந்த இட்லிக்கு இதுதான் அர்த்தமா... அட இத்தன நாள் இது தெரியாப்போச்சே...தெரிஞ்சிருந்தா இன்னும் ரெண்டு சாப்பிட்டிருப்பேனே...

//அதான் சொல்கின்றேன் காமத்தோடு நமக்கு வாழத்தெரியவில்லை, காமம் என்பதை அனுபவித்தல் எனும் பாவணையில்தான் பார்கின்றொம்.//

உண்மைதான் ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்..

வனம் 25 ஆகஸ்ட், 2009 அன்று PM 8:49  

வாங்க பாலாஜி

\\அந்த இட்லிக்கு இதுதான் அர்த்தமா... \\
ம்ம்ம் வேற என்ன அர்த்தம் இருக்கும்னு நிணைச்சீங்க

வலசு - வேலணை 28 ஆகஸ்ட், 2009 அன்று AM 1:04  

கேள்விகளிலான வேள்வி எப்போதும் சுவாரஸ்யமாய் இருக்கும். இங்கேயும் இருந்தது.

வனம் 28 ஆகஸ்ட், 2009 அன்று AM 1:15  

வாங்க வலசு

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Prapa 28 ஆகஸ்ட், 2009 அன்று PM 8:42  

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

வனம் 30 ஆகஸ்ட், 2009 அன்று PM 10:38  

வாங்க பிரபா
அதுக்கென்ன வந்து ஒன்னா சேந்து ஜோசித்துவிட்டால் போச்சி.

நன்றி வந்ததுக்கும் கருத்துக்கும்

சிவக்குமரன் 27 அக்டோபர், 2009 அன்று AM 6:41  

உங்கள் பதிவுகளை முழுக்க படித்தேன். எழுத்துப் பிழைகளிலும் வாக்கிய அமைப்பிலும் கவனம் செலுத்தினால் படிக்க நன்றாக இருக்கும்.

வனம் 27 அக்டோபர், 2009 அன்று PM 8:45  

வாங்க சிவக்குமரன்

கருத்துக்களுக்கு நன்றி,
நிச்சயம் எழுத்துப் பிழைகள் குறைக்க முயலுகின்றேன், வாக்கியங்கள் ........

செதுக்க, செதுக்கத்தானை சிலை, முயலுகின்றேன்.

நன்றி

லோகு 9 நவம்பர், 2009 அன்று AM 1:40  

நண்பர் கருத்து உண்மைதான்... பிற பெண்களின் கண்களை பார்த்து பேசும் ஆண்கள் இங்கே குறைவுதான்..

வனம் 9 நவம்பர், 2009 அன்று AM 2:10  

வாங்க லோகு

நன்றி அடிக்கடி வாங்க.

இனி தொடர்ந்து இடுகை இடுவதாய் முடிவு......

சோம்பல விரட்டனும்.

நன்றி

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin